ஒடிசாவில் 600 மெகாவாட் இந்திராவதி, கர்நாடகாவில் 2000 மெகாவாட் திறன் கொண்ட ஷராவதி ஆகிய இரண்டு நீரேற்று நிலையங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான அளவீடு மற்றும் ஆய்வின் கீழ் நீர்மின் உற்பத்தி நிலையங்களின் (சுமார் 60 GW) முன்மொழிவுகளையும் மின்சார ஆணையம் பெற்றுள்ளது.
அனைத்து மேம்பாட்டாளர்களும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிலைகளில் உள்ளனர். விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட பிறகு, மின்சார சட்டம், 2003 பிரிவு 8 இன் கீழ் மத்திய மின்சார ஆணையத்தின் இசைவுக்காக மேம்பாட்டாளர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மத்திய அரசின் எளிதாக வர்த்தகம் செய்யும் கொள்கைக்கு ஏற்ப நீரேற்று அமைப்புகளின் ஒப்புதலை விரைவுபடுத்தும் வகையில், மத்திய மின்சார ஆணையம் பி.எஸ்.பி.க்களுககான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும் அதன் ஒப்புதலை எளிதாக்கவும் வழிகாட்டுதல்களை மேலும் திருத்தியுள்ளது.
0 Comments