Recent Post

6/recent/ticker-posts

நிலக்கரியில் இருந்து செயற்கை இயற்கை எரிவாயு ஆலை அமைப்பதற்கான கூட்டு முயற்சியில் சிஐஎல் & கெயில் கையெழுத்திட்டன / CIL & GAIL sign joint venture to set up synthetic natural gas plant from coal

நிலக்கரியில் இருந்து செயற்கை இயற்கை எரிவாயு ஆலை அமைப்பதற்கான கூட்டு முயற்சியில் சிஐஎல் & கெயில் கையெழுத்திட்டன / CIL & GAIL sign joint venture to set up synthetic natural gas plant from coal


நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து, இரண்டு முன்னணி மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் இடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சி ஒப்பந்தம் இன்று (05.08.2024). 

இந்த ஒப்பந்தம் மேற்பரப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் (SCG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியிலிருந்து செயற்கை இயற்கை எரிவாயு (SNG) எடுக்கும் ஆலையை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கையைக் குறிக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராணிகஞ்ச் பகுதியில் அமையவுள்ள இந்த ஆலை, ஒரு மணி நேரத்திற்கு 80,000 என்எம்3 செயற்கை இயற்கை எரிவாயுவை (எஸ்.என்.ஜி) உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 

ஆண்டு உற்பத்தி ஒரு மணி நேரத்திற்கு 633.6 மில்லியன் என்எம்3ஆக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 9 மில்லியன் டன் நிலக்கரி. தேவைப்படும். இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் சப்ளை செய்யும்.

நிலக்கரியின் வேதியியல் பண்புகளைப் பயன்படுத்த உதவும் தேசிய நிலக்கரி வாயுமயமாக்கல் இயக்கத்தை நோக்கிய இரண்டு பெருநிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

செயற்கை இயற்கை வாயு (SNG) என்பது ஒரு எரிபொருள் வாயு ஆகும், இது முக்கியமாக மீத்தேன், CH4-ஐ உள்ளடக்கியது, இது பல்வேறு இரசாயனங்கள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகும்.

வரவிருக்கும் ஆலை மூலப்பொருளைப் பாதுகாக்கவும், இயற்கை எரிவாயுவின் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும், தற்சார்பு இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

திரு.டெபாசிஷ் நந்தா, இயக்குநர் (வணிக மேம்பாடு) கோல் இந்தியா மற்றும் கெயில் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் திரு ஆர்.கே.சிங்கால் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel