Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுப்பு / Discovery of complete conch bangle in Vembakotta excavations

வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுப்பு / Discovery of complete conch bangle in Vembakotta excavations

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது.

இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த அகழ்வாராய்ச்சியில், கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது.

இதன்மூலம் சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றம் செய்யும் கூடம் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1600 தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel