அதன்படி நேற்றைய அகழாய்வில், சூது பவள மணியில் சீரும் திமிலுள்ள காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்றைய ஆய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1,550-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments