தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (தீயணைப்புத்துறை), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த டி.ஜி.பி. சீமா அகர்வால், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
0 Comments