ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது.
ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 524 பேர் பலியானதாகவும், இந்த பாதிப்பு கடந்த வருட புள்ளி விவரத்தைவிட அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதுவரை காங்கோவில் 96%-க்கும் அதிகமாக நோய் பாதிப்புகளும், இறப்புகளும் ஒரே நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த புதிய வகை நோய் பாதிப்பு மக்கள் மத்தியில் விரைவாகப் பரவி வருவதால் விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.
0 Comments