தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் 2023 - 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 3.7 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை 2 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 5 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்தாண்டின் காலாண்டில் 12.6 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
2024 - 25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 - 24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதன்மூலம், 6.7 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பிரிவு ஒரு வருடத்திற்கு முன்பு 8.6 சதவிகிதத்திலிருந்து 10.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது.
வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஒரு வருடத்திற்கு முன்பு 9.7 சதவிகிதத்திலிருந்து 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
0 Comments