2024 ஆகஸ்ட் 29 அன்று கோவாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலை அறிமுகப்படுத்தினார். இந்திய கடலோர காவல்படைக்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியுள்ளது.
இந்தக் கப்பல் நாட்டின் கடலோரப் பகுதியில் எண்ணெய் கசிவைத் தடுக்க உதவும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில், திருமதி நீதா சேத் இந்த கப்பலுக்கு 'சமுத்ர பிரதாப்' என்று பெயரிட்டார்.
இந்திய கடலோர காவல்படைக்கு ரூ.583 கோடி செலவில், இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் தளமான ஜி.எஸ்.எல் கையெழுத்திட்டது.
இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
114.5 மீட்டர் நீளமும், 16.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், 4170 டன் எடையை இடப்பெயர்ச்சி செய்யும்.
0 Comments