இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மையம், ராணுவ வீரர்கள் நலச்சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதுதில்லியில் இன்று கையெழுத்திட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராணுவ பொதுப் பள்ளிகளின் ஆசிரியர்களிடையே சைகை மொழி திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய சைகை மொழித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஒத்துழைப்பு கல்வி சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடத்தக்க பயன்களை வழங்கும்.
இந்திய சைகை மொழியில் இராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், காது கேளாத அல்லது கேட்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு மிகவும் அணுகக்கூடிய மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments