இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தியா மற்றும் மலேசியா நாடுகளிடையே டிஜிட்டல் மயமாக்கம், ராணுவ பாதுகாப்பு தளவாட உற்பத்தி, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொழிலாளர்களின வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புஉட்பட இருதரப்புக்கும் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக இந்தியாவின் யுபிஐ, மலேசியாவின் பேமண்ட் நெட்வொர்க்குடன் (பேநெட்) இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
0 Comments