வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது.
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள புதிய அலகுகளை அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நேரடியாக சரிபார்ப்பு செய்வார்கள். இந்த நேரடி சரிபார்ப்புக்கு அஞ்சல் துறை ஊழியர்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பயிற்சி அளிக்கும்.
0 Comments