இந்தியா முழுவதும் டிஜிட்டல் சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய சுகாதார ஆணையமும் (NHA) மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் (MUHS) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (13-08-2024) கையெழுத்தானது. இதன்படி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு செல்லும் நோக்கில் டிஜிட்டல் அடித்தள படிப்பை மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தும்.
தேசிய சுகாதார ஆணையமும் மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து டிஜிட்டல் சுகாதார செயல்பாடுகளை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மேலும் பல படிப்புகளை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்மொழிகிறது.
0 Comments