எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை லாஞ்சரான Man Portable Anti-tank Guided Missile (MPATGM) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO) உருவாக்கியது.
இதை மிக எளிதாக கையில் தூக்கிச் சென்று தோள்பட்டையில் வைத்து எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனம் மீது தாக்குதல் நடத்தும் விதமாக இந்த MPATGM ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் MPATGM ஏவுகணை லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்த முடியும் என கூறப்படுகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த MPATGM ஏவுகணை லாஞ்சரில், இலக்கை துல்லியமாக கணக்கிடும் கருவி, ஃபயர் கன்ட்ரோல் யூனிட் என 3 முக்கிய பகுதிகள் உள்ளன.
ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14-ம் தேதியன்று இந்த MPATGM ஏவுகணை ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் MPATGM ஏவுகணை நேற்று (ஆக. 13) மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments