Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தைச் சோந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது / National Award for Best Teacher for two people from Tamil Nadu

தமிழகத்தைச் சோந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது / National Award for Best Teacher for two people from Tamil Nadu

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். அதேபோன்று, தமிழகத்தில் மாநில அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நிகழாண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியா்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

அதிலிருந்து தகுதியான 50 போ் விருதுக்கு தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் வேலூா் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் ஆா். கோபிநாத்துக்கும், மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் ஆா். முரளிதரனுக்கும் தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தோ்வான ஆசிரியா்களுக்கு செப். 5-ஆம் தேதி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருது வழங்கி கெளரவிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விருதுபெறும் நல்லாசிரியா்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel