Recent Post

6/recent/ticker-posts

நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமனம் / Nobel laureate Mohammed Younis appointed as the head of the interim government of Bangladesh

நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமனம் / Nobel laureate Mohammed Younis appointed as the head of the interim government of Bangladesh

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க அதிபர் முகமது சஹாபுதீன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவரை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அதிபர் சஹாபுதீன், முப்படை தளபதிகள், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

இதில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டார். இதனை அதிபர் முகமது சஹாபுதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீள உதவியதற்காக 2006ம் ஆண்டு யுனிஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் நேற்று கலைத்துள்ளார்.

இதன் மூலம் புதிதாக பொதுத்தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரையிலும் இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel