தமிழ்நாட்டில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க கொள்கை உந்துதலுக்கு, இந்த புதிய தளங்கள் ஒரு சான்றாகும்.
1971-ல் ஈரானின் ராம்சாரில் கையெழுத்திடப்பட்ட ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்ததாரர்களில் இந்தியாவும் ஒன்றாகும். பிப்ரவரி 1,1982 அன்று இந்தியா இந்த மாநாட்டில் கையெழுத்திட்டது.
1982 முதல் 2013 வரை ராம்சார் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால், 2014 முதல் 2024 வரை, நாடு 59 புதிய ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராம்சார் தளங்கள் (18 தளங்கள்) உள்ளன, அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் (10 தளங்கள்) உள்ளன.
0 Comments