இந்திய ரயில்வே மேலாண்மை சேவை அதிகாரி சதீஷ் குமாா், ரயில்வே வாரியத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக நியமிக்கப்பட்டிருப்பதாக வாரியத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக உள்ள ஜெயா வா்மா சின்ஹாவின் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில் அந்த வாரியத்தின் புதிய தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக சதீஷ் குமாரை நியமிக்க உயா் பதவி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
1986-ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயின் இயந்திரப் பொறியாளா்கள் சேவைத்துறை பிரிவு அதிகாரியான இவா் கடந்த 2022, நவம்பா் மாதத்தில் வட மத்திய ரயில்வே துறையின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா்.
0 Comments