SOUTH INDIA INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2024
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2024
TAMIL
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வனப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள், என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு யானைகளின் பயன்பாட்டின் பரப்பளவு பற்றிய தெளிவான விவரங்களை வழங்கும்.
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் இன்றைய தினம் வெளியிட்டார்.
2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023-ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது.
தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
Integrated Elephant Census was conducted from 23.5.2024 to 25.5.2024 in the border districts of South Indian states of Karnataka, Kerala, Tamil Nadu and Andhra Pradesh. The survey was conducted in 26 forest divisions in Tamil Nadu. A total of 2,178 persons, including 1,836 forest staff and 342 volunteers, were involved in the survey.
In this survey, the data collected was systematically analyzed and the number of elephants was estimated in 26 forest divisions. The survey will provide clear details of elephant population, sex ratio, elephant dynamics and area of use of elephants for better management of elephant habitat.
The Chief Minister today released the integrated elephant census report for the year 2024 which will help to know the number of elephants and their life patterns in Tamil Nadu. According to the 2017 census, the number of elephants in Tamil Nadu was 2,761.
Chief Minister M.K. The number of elephants in Tamil Nadu has increased to 2,961 as per the Integrated Elephant Census Report 2023 due to various measures taken by the Stalin-led government since taking charge for elephant conservation.
Now as a follow-up, according to the Elephant Census Report 2024, the number of elephants in Tamil Nadu has now increased to 3063. The number of elephants in Tamil Nadu has increased due to the various wildlife conservation measures undertaken by the Tamil Nadu government, particularly through the Elephant Conservation Movement.
It is worth noting that the activities of the Tamil Nadu government such as Agathiya Hill Elephant Sanctuary, Tamil Nadu Elephant Conservation Movement, protection and development of elephant habitats were the reason for this.
0 Comments