THAGAISAL TAMILAR AWARD 2024
2024ம் ஆண்டு தகைசால் தமிழர் விருது
TAMIL
THAGAISAL TAMILAR AWARD 2024 / 2024ம் ஆண்டு தகைசால் தமிழர் விருது: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் 'தகைசால் தமிழர்' என்ற விருது கடந்த 2021- ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பெற்றுள்ளனர். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ENGLISH
THAGAISAL TAMILAR AWARD 2024 / 2024ம் ஆண்டு தகைசால் தமிழர் விருது: The Tamil Nadu government has been awarding the 'Thagaisal Tamilar' award since 2021 to honor those who have contributed immensely to the development of Tamil Nadu and the Tamil community.
This award has been given in the last 3 years by Sankaraiah, R. Nallakannu and teacher K. Veeramani have received. As such, this year's Thagaisal Tamilar Award has been announced to senior Congress leader, writer and politician Kumari Ananthan.
Chief Minister M.K.Stalin is going to present the Thagaisal Tamilar Award to Kumari Ananthan during the Independence Day celebrations. Kumari Ananthan, who has been selected for the Thakaisal award, will be given a certificate of appreciation worth Rs 10 lakh.
In order to honor Kumari Ananthan, who engaged in public life at a young age, was a legislator and a member of Parliament, the head of the Gandhi Forum organization, a literary treasure, a sea of literature and a cultured person who did not enmity with anyone, his name has been considered for the Thagaisal Tamilar Award for this year and it has been decided to give him this award.
0 Comments