உயிரி எரிபொருள் துறையில் சமீபத்திய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஜி-வன் யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. லிக்னோசெல்லுலோசிக் மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மேம்பட்ட உயிரி எரிபொருள்களை உள்ளடக்கியது இதுவாகும்.
அதாவது விவசாய, வனவியல் எச்சங்கள், தொழில்துறை கழிவுகள், தொகுப்பு வாயு, ஆல்கா போன்றவற்றின் மூலமான திட்டமாகும். "போல்ட் ஆன்" ஆலைகள், "பிரவுன்ஃபீல்ட் திட்டங்கள்" இப்போது தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும் அவற்றின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் தகுதி பெறும்.
0 Comments