பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு நிதி உதவியை (CFA) மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டு முதல் 2031-32-ம் நிதியாண்டு வரை ரூ.4136 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,000 மெகாவாட் ஒட்டுமொத்த நீர்மின் திறன் ஆதரிக்கப்படும்.
மின்துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான 10% மொத்த பட்ஜெட் ஆதரவு (GBS) மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.
0 Comments