பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் முன்மொழிந்த தூய்மையான தாவரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ரூ.1,765.67 கோடி கணிசமான முதலீட்டுடன், இந்த முன்னோடி முயற்சி, இந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளதுடன், சிறப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய தரங்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2023 இல் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இது அறிவிக்கப்பட்டது.
வைரஸ் இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களுக்கான அணுகலை இது வழங்கும். இது பயிர் விளைச்சல் மற்றும் மேம்பட்ட வருமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
நெறிப்படுத்தப்பட்ட சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை நாற்றங்கால்களை சுத்தமான நடவுப் பொருட்களை திறம்பட பரப்பவும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும்.
0 Comments