பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 24,657 கோடி ரூபாய் (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய வழித்தட முன்மொழிவுகள் நேரடி இணைப்பை வழங்குவதுடன், நகர்வை மேம்படுத்துவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்கும்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது இப்பகுதியில் உள்ள மக்களை "தற்சார்பாளர்" ஆக மாற்றி, இப்பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்.
இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
0 Comments