பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'வேளாண் கட்டமைப்பு நிதியம்' என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறையின் நிதித் திட்டத்தை, மேலும் ஈர்ப்புடையதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில் விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், வேளாண் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த முயற்சிகள் தகுதியான திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும், வலுவான வேளாண் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
0 Comments