பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைந்த மத்திய துறைத் திட்டமான 'விஞ்ஞான் தாரா' என்ற பெயரில் இணைக்கப்பட்ட மூன்று குடைத் திட்டங்களைத் தொடர ஒப்புதல் அளித்தது.
2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான 'விஞ்ஞான் தாரா' திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு 10,579.84 கோடி ரூபாயாகும்.
திட்டங்களை ஒரே திட்டமாக இணைப்பது நிதி பயன்பாட்டில் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் துணை திட்டங்கள் / திட்டங்களுக்கு இடையே ஒத்திசைவை ஏற்படுத்தும்.
0 Comments