இதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்டவோ, வாங்கவோ நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 2.30 லட்சம் கோடி அரசு உதவி வழங்கப்படும்.
நகர்ப்புறங்களில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற நிலையான வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் முக்கிய முன்னோடித் திட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் ஒன்றாகும்.
0 Comments