பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மகாராஷ்டிராவில் தானே ஒருங்கிணைந்த வட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
29 கி.மீ தூர திட்டம் தானே நகரின் மேற்குப் பகுதியின் சுற்றளவில் 22 நிலையங்களுடன் இயங்கும். இந்தக் கட்டமைப்பின் ஒருபுறம் உல்லாஸ் நதியும் மறுபுறம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் உள்ளன.
இந்த இணைப்பு, நகரம் தனது பொருளாதார திறனை உணரவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நிலையான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை வழங்கும். இந்த திட்டம் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான உத்தேச மதிப்பீடு ரூ.12,200.10 கோடியாகும். இதில் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் சமமான பங்கு மற்றும் இருதரப்பு முகமைகளின் பகுதி நிதி ஆகியவை அடங்கும்.
0 Comments