மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை, வைப்புத் தொகை திரட்டுதல், டிஜிட்டல் பணப் பட்டுவாடா, சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, நிதி சேவைகள் துறை செயலாளர் (நியமனம்) திரு எம் நாகராஜு, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், நிதிச் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2024 நிதியாண்டின் போது நிகர வாராக்கடன்கள் 0.76 சதவீதமாக குறைந்தது. மேலும் பங்குதாரர்களுக்கு ரூ.27,830 கோடி ஈவுத்தொகையுடன் பொதுத்துறை வங்கிகள் ரூ. 1.45 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன என்ற தகவல் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments