வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவில் வக்ஃபு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.
ஆனால் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்க அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒப்புதல் தெரிவித்தார்.
0 Comments