மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஸ்வர்கேட் மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவைப் பிரதமர் தொடங்கி வைத்தார். புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட்-கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சோலாப்பூர் விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே அவர்களின் முதல் பெண்கள் பள்ளி நினைவு வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
0 Comments