Recent Post

6/recent/ticker-posts

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 7 major projects worth Rs 14,235.30 crore to improve life and livelihood of farmers

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 7 major projects worth Rs 14,235.30 crore to improve life and livelihood of farmers

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1) டிஜிட்டல் வேளாண் இயக்கம்: டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்: இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளை பருவநிலை நெகிழ்திறனுக்கு தயார்படுத்துவதுடன் 2047-ம் ஆண்டுக்குள் உணவு பாதுகாப்பை வழங்கும். இது, ஆராய்ச்சி மற்றும் கல்வி, தாவர மரபியல் வள மேலாண்மை, உணவு மற்றும் தீவனப் பயிருக்கான மரபியல் மேம்பாடு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர் பெருக்கம், வணிகப் பயிர்களைப் பெருக்குதல், பூச்சிகள், நுண்ணுயிரிகள், மகரந்தச் சேர்க்கையாளர்கள் போன்றவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என 7 அம்சங்களைக் கொண்டதாகும்.

3. வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குதல், புதிய கல்விக் கொள்கை 2020, டிஜிட்டல் டிபிஐ, செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், இயற்கை விவசாயம் மற்றும் பருவநிலை நெகிழ்திறனை சேர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்படும்.

4. நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: மொத்தம் ரூ.1,702 கோடியில், கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடை கல்வி, பால் பண்ணை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, விலங்கு மரபியல் வள முகாமைத்துவம், உற்பத்தி மற்றும் மேம்பாடு, கால்நடை ஊட்டச்சத்து மற்றும் சிறிய அசைபோடும் விலங்குகள் உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

5. தோட்டக்கலையின் நிலையான வளர்ச்சி: மொத்தம் ரூ.1,129.30 கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தோட்டக்கலை பயிர்கள், வேர், கிழங்கு, குமிழ் மற்றும் வறண்ட பயிர்கள், காய்கறி, மலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள், தோட்டப்பயிர்கள், மசாலா, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை உள்ளடக்கியது.

6. ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல்

7. ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மை

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel