பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத்குமார், சைலேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்த்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன் வென்றார்.
பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் ஈட்டி எறிதல் F46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜார் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இதுவரை வென்றுள்ளது. 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
0 Comments