Recent Post

6/recent/ticker-posts

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி 2024 - 5வது நாள் / Paris Paralympic Games 2024 - Day 5

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி 2024 - 5வது நாள் / Paris Paralympic Games 2024 - Day 5

பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரிஸ் பாராஒலிம்பிக் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் - சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப்பதக்கம் வென்றார்.

ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த 26 வயதான சுமித் அன்டில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்து தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான(எஸ்எல்4) தனிநபர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சுஹாஸ், பிரான்ஸ் வீரர் லூகாஸுக்கு எதிரான நடைபெற்ற போட்டியில், சுஹாஸ் 9 - 21, 13 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளி வென்று சாதித்துள்ளார்.

ஆடவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் எஃப் 56 பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel