2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை ஊதித் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் சீனாவை சந்தித்தது. ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடப்புத் தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை சென்று பட்டத்தை தனதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி வென்ற 5-ஆவது கோப்பை இதுவாகும்.
0 Comments