3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, இளைஞர் சக்தி, உலக அளவில் அரசின் செல்வாக்கு போன்ற அளவீடுகளின் படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தாக்குதலுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் விரைந்து மீட்சி பெற்றுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக லோவி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி அடிப்படையிலும் உலகிலேயே 3ஆவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா பெற்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தோடு, ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் அதிகரிப்பது இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுகிறது.
சீனா, ஜப்பான் மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை உயரும் நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உழைக்கும் வயதுடைய இளைஞர்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாலேயே, பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெறும் என விளக்கம் அளித்துள்ளது.
0 Comments