பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அரசு முறைப்படியான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5-வது முறையாக சிங்கப்பூர் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
இந்த பயணத்தின் போது இருநாடுகளிடையே செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் துறை உள்ளிட்டவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனையடுத்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.
0 Comments