புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்திய சைபர் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) முதலாவது அமைப்பு தினக் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சைபர் மோசடி தணிப்பு மையத்தை (சி.எஃப்.எம்.சி) நாட்டுக்கு அர்ப்பணித்த உள்துறை அமைச்சர், கூட்டு சைபர் குற்ற விசாரணை அமைப்பை தொடங்கி வைத்தார்.
'சைபர் கமாண்டோக்கள்' திட்டத்தையும், சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். ஐ4சி-யின் புதிய சின்னம், தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கையும் அமைச்சர் வெளியிட்டார்.
0 Comments