புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது பொதுச் சபைக் கூட்டத்தில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் திரு ராஜா ரந்தீர் சிங், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் திருமதி பி.டி.உஷா, 45 ஆசிய நாடுகளின் விளையாட்டுத் துறையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments