Recent Post

6/recent/ticker-posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம் / Change in the Tamil Nadu Cabinet

தமிழக அமைச்சரவையில் மாற்றம் / Change in the Tamil Nadu Cabinet

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • செந்தில் பாலாஜி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
  • கோவி செழியன் - உயர்கல்வித் துறை
  • ஆர்.ராஜேந்திரன் - சுற்றுலாத் துறை
  • ஆவடி நாசர் - சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை
  • இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது. 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் தற்போது பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel