Recent Post

6/recent/ticker-posts

வெம்பக்கோட்டை அகழாய்வில் பெரிய அளவில் மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு / Large scale earthenware found in Vembakotta excavations

வெம்பக்கோட்டை அகழாய்வில் பெரிய அளவில் மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு / Large scale earthenware found in Vembakotta excavations

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரைக்கும் நடத்தப்பட்ட அகழாய்வில் சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள், உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது. 

முன்னோர்கள் இதனை உணவு அருந்தவோ, மண் பாண்டங்களுக்கு மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம். சமையல் பாத்திரம் உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel