தென்னாப்பிரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர், ஆபத்தான சூழல் அல்லது விபத்தில் சிக்கினால் அதை மீட்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு கடற்படைகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, தென்னாப்பிரிக்க கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் மான்டே லோப்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கடல்சார் பாதுகாப்பு, பரஸ்பர ஆதரவுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அமலாக்குவதை இந்த ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படை தனது நீர் மூழ்கி மீட்பு வாகனத்தின் (டிஎஸ்ஆர்வி) உதவியை தேவைப்படும்போது தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும்.
இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும். இந்த இத்துழைப்பு இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான நீண்டகால கடல்சார் உறவை வலுப்படுத்தும் வகையில் அமையும்.
0 Comments