Recent Post

6/recent/ticker-posts

புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் / The Prime Minister inaugurated the new office premises of the Embassy of India in Brunei

புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் / The Prime Minister inaugurated the new office premises of the Embassy of India in Brunei

சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக பண்டார் செரி பெகாவான் நகருக்கு இன்று சென்றடைந்தார்.

புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா புருனே இடையேயான தூதரக உறவுகள் 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இது பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும்.

பண்டார் செரி பெகாவான் வந்தடைந்த பிரதமருக்கு, சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே பிரதமர் அலுவலகத்தின் பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான மேதகு இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா பிரதமரை அன்புடன் வரவேற்றார்.

புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அவர் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக திகழ்வதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் அவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

புருனேக்கு வரும் இந்தியர்களின் முதல் கட்டம் 1920-களில் எண்ணெய் கண்டுபிடிப்புடன் தொடங்கியது. தற்போது, சுமார் 14,000 இந்தியர்கள் புருனேயில் வசித்து வருகின்றனர்.

புருனேயின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்திய மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel