விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
அங்கு இதுவரைக்கும் பத்து குழிகள் தோண்டப்பட்டு ஆபரணங்கள், செப்புக்காசுகள், சுடுமண் காதணிகள், சூது பவளம், உள்பட 1560 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒன்பதாவது அகழாய்வு குழியை மேலும் தோண்டியபோது பச்சை நிறத்திலான இரண்டு கல்மணிகள் கிடைத்துள்ளன. இந்த கல்மணிகள் பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்களாகவும், ஆண்கள் அணியும் மோதிரத்தில் பதிப்பதற்காகவும் பயன்படுத்தி இருக்கலாம்.
0 Comments