பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 1,000 கோடி உத்தேச தனியார் கூட்டு மூலதனத்திற்கான இந்த நிதியத்தின் செயல்பாட்டுக் கால அளவு செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகளையும் நிதித் தேவையையும் பொறுத்து நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 150 முதல் 250 கோடி வரை இருக்கும்.
0 Comments