ஆகஸ்ட் மாதத்தில் 1.31 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் செப்டம்பரில் 0.53% அதிகரித்து 1.84% ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் 3.11 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 11.53% ஆக அதிகரித்துள்ளது.
வெங்காயம், காய்கறிகள், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஆகஸ்டை விட செப்டம்பரில் கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களுடன் ஆலை உற்பத்திப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பணவீக்க விகிதம் செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
0 Comments