டெல்லி சென்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மெட்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை வைத்தார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னைக்கு 2ம் கட்ட மெட்ரோ திட்ட கட்டுமான பணிக்காக, ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டாம் கட்டத் திட்டமானது மாதவரத்திலிருந்து சிப்காட் வரை 50 நிலையங்களுடன் 45.8 கிமீ நீளம், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பை வரை 30 நிலையங்களுடன் 26.1 கிமீ நீளம், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 48 நிலையங்களுடன் 47 கிமீ நீளம் என்ற மூன்று வழித்தடங்களை கொண்டுள்ளது.
0 Comments