ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பு அளித்த வீரர்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெறுவர்.
‘மிஸ்டர் 360’ என்றழைக்கப்படும் தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் - பேட்டர் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நீத்து டேவிட் ஆகிய மூவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments