முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்களை மும்பை அணி குவித்தது. சர்பராஸ் கான் 222* ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை அணி 316/8 என்ற நிலையில் இருந்ததால் போட்டி சமனில் முடிந்தது.இரானி கோப்பை போட்டி சமனில் முடிந்தபோதும் முதல் இன்னிங்ஸில் லீட் எடுத்ததால் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் மும்பை 27 வருடங்களுக்கு பிறகு இரானி கோப்பையை வென்று அசத்தியது. அவர்கள் கடைசியாக 1997-1998 இரானி கோப்பையை வென்றிருந்தனர். இரட்டை சதமடித்த (222* ரன்கள்) சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 Comments