2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE IN LITERATURE 2024
TAMIL
2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024: 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இந்த விருது வழங்கப்பட உள்ளது.
"வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் அகாடமி அறிவித்துள்ளது.
1970 ஆம் ஆண்டு தென் கொரிய நகரமான குவாங்ஜூவில் பிறந்தவர் ஹான் காங். தனது ஒன்பது வயதில் தனது குடும்பத்துடன் சியோலுக்குச் குடிப்பெயர்ந்தார். இவர் இலக்கிய பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தந்தையே போலவே பெண் ஹான் காங்க்கும் சிறுவயதில் இருந்தே எழுத்து மீது மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இவர் எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் இயங்கி வருகிறார். இவர் முதலில் இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995ஆம் ஆண்டு 'லப் ஆஃப் யோசு' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.
இதன்பிறகு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகள் வெளியிட்டார். இதன்பிறகு 2007ஆம் ஆண்டு 'தி வெஜிடேரியன்' என்ற நாவலை எழுதினார்.
இந்த நாவல் சர்வதேச அளவில் ஹன் கங்குக்கு புகழை தேடி தந்தது. வழக்கமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்று கொள்ள மறுக்கும் கதாநாயகன் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளை பேசியது இந்த நாவல்.
இறைச்சியை உண்ண மறுப்பதால் மோசமான வன்முறைகளை சந்திக்கிறது அந்த கதாபாத்திரம்இதுபோன்ற பல நாவல்கள், சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றர் ஹான் காங். இந்த நிலையில், தற்போது இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ENGLISH
NOBEL PRIZE IN LITERATURE 2024: The 2024 Nobel Prize for Literature has been announced. The award will be given to Han Kang, a female writer from South Korea. The Nobel Academy announced that the award was given for "his intense poetic prose that confronts historical traumas and reveals the fragility of human life.
Han Kong was born in 1970 in the South Korean city of Gwangju. Moved to Seoul with his family at the age of nine. He comes from a literary family. His father was a famous writer. Like her father, daughter Han Kang has been very interested in writing since childhood.
Apart from writing, he is also active in art and music. He first gained popularity by publishing many poems in the magazine. In 1995, he published a collection of short stories titled 'Love of Yosu'. After this he published many prose works like novels and short stories. After this he wrote the novel 'The Vegetarian' in 2007.
This novel made Han Gang famous internationally. This novel talks about the problems faced by the protagonist who refuses to accept the usual eating habits. Han Kong is famous for writing many such novels and short stories, and the character faces terrible violence for refusing to eat meat. Currently, he has received the Nobel Prize for Literature.
0 Comments