2024 ஆம் ஆண்டின், இரண்டாவது ராணுவத் தளபதிகள் மாநாடு, மெய்நிகர் முறையில் 2024, அக்டோபர் 10 அன்று காங்டாக்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமை தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளின் அனைத்து அம்சங்கள், எல்லைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறைக்கான சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூடுதலாக நிறுவன மறுசீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளிலும் மாநாடு கவனம் செலுத்தியது.
மாநாட்டின் இரண்டாவது நாளின் முக்கிய அம்சமாக இந்திய ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை அமைந்திருந்தது.
கேங்டாக்கில் மோசமான வானிலை நிலவியதால், சுக்னாவில் உள்ள ராணுவ முகாமிலிருந்து பாதுகாப்பு அமைச்சரின் உரை மெய்நிகர் முறையில் நிகழ்த்தப்பட்டது.
0 Comments